29 Oct 2009

லூலூ யூசுப்அலி - சில்லறை வணிக உலகின் முத்து



வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களின் சுவாசமாக விளங்கும் சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்தான் "லூலூ " இதன் வாசல் மிதிக்காதவர்கள் இந்த பிரதேசத்தில் எவருமே இருக்க முடியாது. எம். கே குழுமத்திற்கு சொந்தாமான இந்த நிறுவணத்தின் மிக குறுகிய கால அபார வளர்ச்சிக்கு வித்திட்டவர்தான் எம்.கே குழுமங்களின் மேலாண்மை நிர்வாகி 54 வயதான யூசுப் அலி, தென்னின்ந்தியாவின் , கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமமான நட்டிகாலில் 1958 ஆம் ஆன்டு பிறந்த யூசுப் அலி தனது 15 ஆவது வயதில், 1973 ஆம் வருடம் ஒரு சூட்கேசும், கையில் கொஞம் தொகையுமாக மும்பையில் இருந்து கடல் மார்க்கமாக துபாய் துறைமுகம் வந்து இறங்கினார்.

முப்பது வருடங்களுக்குள் 15000 கோடி ருபாய்க்கு சொந்மான எம். கே தொழிழ் குழுமத்தின் சூத்திரதாரியான வரலாறு ஒரு நெடும் கதை, தன்னை துபாய் துறைமுகத்திலிருந்து அழைத்து செல்ல வந்த தனது பெரிய தந்தையான எம். கே அப்துல்லவுடன் 5 மணி நேர பயணத்திற்கு பின் அபுதாபி வந்து சேர்ந்த யூசிப் அலி, பின் அவருடன் இணனைந்து அவரின் சிறிய மளிகை கடையில் அவருக்கு உதவியாக சில காலம் பொருட்களை ஏற்றி, இறக்குவது, வினியோகம் செய்வது என வேலைகள் என இருந்தவர், பதனப்படுத்தப்ப்ட உணவுப் பொருட்களை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அபுதாபி நகரம் மட்டுமல்லாமல் புற நகர் பகுதி, மேற்கு அபுதாபி அமீரகத்திலும் வினியோகம் செய்ய ஆரம்பித்து 25 ஆயிரம் பணியாளர்கள் பணி புரியும் மாபெரும் தொழில் பேரரசின் வளர்ச்சிக்கு வித்திட்டார்.

சில காலங்களில் இவரது தொழில் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது, உணவு பொருட்களை கப்பல், நட்சத்திர விடுதிகள், கேட்டரிங் கம்பெனிகள் என பல்வேறு துறைகளுக்கு வினியோகம் செய்து, தனது மூலதனத்கை பல மடங்குகள் பெருக்க ஆரம்பித்தது. 1980 களில் அமீரகத்தின் சில்ல்றை வணிகத்தின் கணிசமான பங்கு இவரது நிறுவனத்தை சார்ந்தாக கருதப்பட்டது. தனது பெரிய தந்தையின் ஓய்விற்கு பிறகு இதன் நிர்வாகம் இவர் வசம் வரும்பொழுது, தனது கணவுகளின் கோட்டைகான ஆயத்த வேலைகளை தொலை தூர நம்பிக்கை பார்வையுடன் தொடங்கினார். இவரது இத்தகைய நம்பிக்கைக்கு காரணமாக இவர் சொல்வது மறைந்த தலைவர் சேக் சயித் பின் அல் நக்யான் அவர்களின் "எதிர்காலத்த நோக்கிய வீரப்பயனம்" என்ற கொள்கையை பின்பற்றியதுதான். 1990கலீள் வளைகுடா போர்க்காலங்கள் இவரது பொற்காலங்கள் என கொள்ளலாம், அசாதாரணமான காலகட்டத்தை சரியான காலமாக திட்டமிட்ட்டது மிகப் பெரும் விந்தை ஆம் இவரின் சூப்பர் மார்கட்களும்,டிபார்ட்மென்ட் ஸ்டோர்களும் இந்த காலத்தில்தான் தொடஙகப்பட்டது.

இறைவனின் அருளால் இதன் வளர்ச்சி உச்சானிக்கு போய் இதன் மகுடமாக 2000 ஆம் ஆண்டு லூலூ சூப்பர் மார்கட் முதன் முதலில் துபாய் அல்கோசில் தொடங்கப்பட்டது, துருக்கியின் ராம் ஸ்டோர் போன்ற அமைப்பில் உருவான இந்த லூலூ மீண்டும் அசுர வளர்ச்சி பெற்று 8 வருடங்களில் 75 கிளைகள் தொடங்கப்பட்டது, அமீரகம் மட்டும் அல்லாமல், கத்தார், பஹ்ரைன், சௌதி அரேபியா,ஏமன், எகிப்த்,குவைத் இந்தியா என இதன் சாம்ராஜ்யம் விரிந்து கொண்டேபோகிறது, போர், பொருளாதார சீரழிவு, சந்தை ஏற்ற இறக்கம் என எந்த விளைவுகளும் இவரின் கோட்டையை அசைத்தூபார்க்க முடியவில்லை, அதற்கு காரணமாக இவர் சொல்வது,இறைவணின் அருளும், எதிர் நீச்சல் போடும் குணமும், அடிப்படை திடதண்மையும்தான்.

கொச்சின் விமானத்தளத்தின் விரிவாக பணியில் இவரது பங்கு கணிசமானது, இந்திய பொருளாதாரதை நோக்கி திரும்பும் இவர் பார்வை ஒரு பொருளாதார மலர்ச்சிக்கு வித்தாக மாறலாம். இவரின் சேவையை பாராட்டி அபுதாபி சேம்பர் ஆப் காமர்ஸ் இவரை அதன் இயக்குனர்களில் ஒருவராக நியமித்து இருக்கிறது, ஒரு வெளி நாட்டு வாழ் இந்தியரை இவ்வாறு அங்கீகாரத்தது இதுவே முதல் முறை. எல்லைகள் தாணடும் இவரது தொழில் வளச்சி மற்றும் சமூக பணியை பாராட்டி இந்திய அரசு இவருக்கு "பதம்ஷ்ரி" விருதை வழங்கி இந்த ஆண்டு கௌரவித்து இருக்கிறது, விண்ணை முட்டும் இவர் வளர்ச்சிக்கு இன்னும் எத்தனை விருதுகள் காத்துக் கொண்டிருக்கிறதோ?

27 Oct 2009

தமிழ் முஸ்லிம்களின் பூர்வீகம்....


தமிழக முஸ்லிம் மக்களின் ஆரம்பகால குடியேற்றம் பற்றிய ஆய்வு குறித்து ஒரு கட்டுரை....


அரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது.

சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்று அழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர், துலுக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களது சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ – பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன. இறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு திங்கள் உலக நலன் கருதி உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.

மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். மதுரையில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான். இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் (கி.பி.726) திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றும் இருக்கிறது.

இத்தகைய இஸ்லாமிய அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவை, அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

பாண்டிய நாட்டின் தென்பகுதியான நாஞ்சில் நாட்டில் திருவிதாங்கோடு அருகில் அஞ்சுவண்ணம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர், நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.

வாணிபத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாய்மொழியான தமிழ், இப்போது அவர்தம் வழித்தோன்றல்களின் தாய் மொழியாக மாறியது. அதுவரை சோழ – பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டுகளிலும், சோனகர் – துலக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும், அரசியல் முதன்மையையும் எய்தினர்.

இந்தப் புதிய தமிழ்ச் சமுதாயத்தினரது அணிகலன்களும், ஆடைகளும், உணவு முறைகளும் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாளடைவில் இந்தக் குடியிருப்புகளிலும், வணக்கத் தலங்களிலும் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள், குறிப்பாக மேற்கூரைகள், கும்ப அமைப்பில் அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள், சாளரங்கள், முகப்பில் பயன்படுத்தப்பட்ட வில் வடிவ குதிரைக் குளம்பு அமைப்பு வளைவுகள் ஆகியவை திராவிட – இஸ்லாமிய கட்டுமானங்கள் என்ற புதிய பாணியை ஏற்படுத்தின.

தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.

தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த இறைநேசர் நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவர்களை அடுத்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் அரபுநாட்டு மதீனா நகரிலிருந்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த இறைநேசர் செய்யிது இபுறாஹீம், 12 ஆண்டுகளுக்கு மேலாகப் பாண்டிய நாட்டு மக்களது ஆன்மீக வழிகாட்டியாக அரிய உபதேசங்களைச் செய்து சேதுநாட்டு ஏர்வாடியில் கி.பி. 1195-ல் புகழுடம்பு பெற்றார்.

தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு ராஜேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

இதுபோலவே கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க – மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இங்ஙனம் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புரக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.

தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.




நன்றி : தினமணி

23 Oct 2009

மர்வான் அல் ஷகப் - அதி வேக அரேபிய குதிரை


பழங்காலம் தொட்டு குதிரைகள் போக்குவரத்து, செய்தி தொடர்பு மற்றும் போர்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது, உலகின் பெருவாரியான போர்களில் பங்கெடுத்த குதிரைகள், அரசர்களின் வாழ்வில் வாள் போன்று குதிரையும் முக்கிய அங்கமாக திகழ்ந்தது.அக்காத்தில் அரசனுக்கும் பிரபுக்களுக்கும் இடையில் குதிரை பந்தயம் ஒரு விருப்பமான பொழுது போக்காக இருந்தது. அது போல் அரேபியர்களுக்கு பொதுவாக ஒட்டகம், மற்றும் குதிரை என்றால் அதீத பிரியம். வளைகுடா நாடான கத்தாரின் அரச குடுமபத்திற்கு சொந்தமான் ஒரு மிக உயர்தர குதிரைதான் மார்வான் அல் ஷகப். எட்டே வயது நிரம்பிய இக்குதிரை தொடர்ந்து மூன்றாம் முறையாக உலக அரேபிய சாம்பியன் பட்டத்தை வென்று அரேபியக் குதிரைகளின் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. அத்துடன் சீனியர் ஸ்டல்லியன் என்ற விருதையும் பாரிசில் நடந்த போட்டியில் பெற்றது அரபுலக குதிரைப்பிரியர்களை மகிழ்ச்சிக்கு ஆட்படுத்தியதாக காத்தார் அல் சகப் குதிரை க்ளப்பில் பனிபுரியும் குதிரை பந்தய ஆய்வாளர் தமீம் தெரிவித்தார். இதன் விலை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டாலும் (60 கோடி இந்திய ரூபாய்), இதன் அதிவேக ஆற்றலுக்கு விலையே இல்லை என்பதே உணமை.

18 Oct 2009

உலக சித்தாந்தங்களில் மாட்டிக் கொன்ட இரு பசு மாடுகள் !!



உலக சித்தாந்தங்களைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டுக் கொன்டிருந்தாலும், கம்யூனிசம்னா என்ன? சோசியலிசம்னா என்னனு ஒரே குழப்பமாகத்தான் இருக்கு...... அதற்காகத்தான் இரு பசுமாட்டு பொருளாதார தத்துவம் ஒன்றை ஒரு மேதை உருவாக்கியிருக்காரு... அதுதான் இது.

சோசியலிசம்: உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால் , ஓன்ன மட்டும் நீங்க வச்சிக்கிட்டு, அடுத்ததை சமர்த்தா பக்கத்து வீட்டு அலமேலு மாமிக்கு கொடுத்துடனும்.

கம்னியுசம்:
உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால், இரண்டயுமே கவர்ன்மென்ட் எடுத்துக்கிட்டு, மறக்காமல் ஒரு நாளைக்கு அரை லிட்டர் பால் இலவசமா தரும்...

பாசிசம்:உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால் இரண்டயுமே கவர்ன்மென்ட் எடுத்துக்கிட்டு, நியாயமன! விலையில் பால் விற்பாங்க.... காசு கொடுத்து வாங்கிக்கலாம்...

சர்வாதிகாரம் :உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால், இரண்டயுமே கவர்ன்மென்ட் எடுத்துக்கிட்டு, உங்களை சுட்டு கொன்னுடும்........

முதலாளித்துவம்:உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால், ஒன்னை வித்துட்டு ஒரு காளை மாடு வாங்கியே ஆகணும்.

ஜன நாயகம்:
உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால், எக்கச்சக்க வரிய போட்டு இரன்டையும் ஒரே ஒரு மாடு வச்சிருக்கிற ஒரு வெளி நாட்டுக்கு விக்க தூண்டும், முக்கியமான விஷயம் ... அந்த வெளி நாடு வச்சிருக்கிற ஒரு மாடும் உங்க நாடு கொடுத்த அன்பளிப்பாகத்தான் இருக்கும்...

மேலே பார்த்தது எல்லாம் பொதுவான சித்தாந்தங்க்ள் மட்டும்தான்,இது போல் பண்ணாட்டு கம்பெனிகள் தங்கள் நாட்டிற்கு ஏற்றார் போல தனி தனி கொள்கைகள் வச்சிருப்பாங்க..... பொதுவான பண்ணாட்டு கம்பெனிகளின் தத்துவம் என்ன தெரியுமா.........உங்களிடம் இரு பசுமாடுகள் இருந்தால், ஓன்னை வித்துட்டு, அடுத்ததை கட்டாயப்படுத்தி நாலு மாட்டிடம் கறக்க வேண்டிய பாலை கறக்க வேண்டியது, அப்புறம் அது செத்துப் போனதும் , ஏன் செத்ததுனு பெரிய ஆய்வு நடத்தி ரிபோர்ட் சமர்ப்பிக்கனும்........ அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.