22 Jul 2009

கான்டினென்டல் ஏர்லைன்சும் டாக்டர் அப்துல் கலாமும்

என்ன அணுகுமுறையோ தெரியவில்லை, அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் அட்டூழியங்களுக்கு எல்லையே இல்லை தன் நாட்டின் அரசை போலவே... ஏர்லைன் விதிகள் ஒரு புறம் இருந்தாலும், சோதணை செய்த அமெரிக்க முதலாளிகளின் இந்திய வேலைக்காரர்களுக்கு ஒரு காமன் சென்ஸ், ஒரு கர்ட்டசி வேண்டாம், விமான துறை மந்திரி சொல்வத பார்த்தால், இந்திய அரசாஙக ப்ரட்டகாலை மீறிய செயலாக கருதி சிறையில் அடைக்க வழிவகைகளை தேடுகிறார். நேற்று வரை பணியாத கான்டினென்டல் இன்று பகிரங்க மண்ணிப்பை கோருகிறது, அமெரிக்க முதலாளிகளின் தீவிர விசுவாச இந்தியர்கள் தன் வேலை இழந்து,உள்ளே போவது உறுதிப்பாட்ட நிலையில், மௌனித்திருக்கும் டாக்டர் கலாமின் கருத்து மிக அவசியம்.

1 comment:

  1. சோனகன்,

    நீங்கள் ஆத்திரப்படுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அமெரிக்க விமான நிறுவனங்கள் மட்டுமல்லாது விமான நிலைய ஊழியர்கள் கூட அமெரிக்க செனட்டர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களை ஆடை கழற்றி சோதனையிட்ட சம்பவங்கள் அமெரிகாவில் நிறைய உண்டு. (உ+ம்: ஜோன் டிங்கல், டி ஃபாசியோ )ஆனால் இந்தியாவிலேயே இருந்து கொண்டு அமெரிக்க எஜமானர்களுக்கு வால்பிடிக்கும் போதே இவ்வலவு கோபம் வருகிறது. அமெரிக்காவில் வந்து அமெரிக்கர்களுக்கு வால் பிடிக்கும் இந்தியர்களைக் கண்டீர்களா? காறித்துப்ப வேண்டும் போலிருக்கும். இந்திய ஜனாதிபதிக்கே இந்த நிலை என்றால் இந்தியாவில் வந்திறங்கும் ஸ்ரீலங்கா, வங்கதேச பாகிஸ்தானிய பயணிகலை இந்திய குடிவரவு அதிகாரிகள் நடாத்தும் விதம் இருக்கிறதே...அப்பப்பா....

    ReplyDelete